ரிலீசாகி ஒரு வாரம் தான் ஆகுது... அதற்குள் இப்படியா..! பரிதாப நிலையில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’

First Published Oct 29, 2022, 10:15 AM IST

பிரின்ஸ் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து அப்படத்தை தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீசான படம் பிரின்ஸ். தெலுங்கில் ஜாதி ரத்னலு என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த அனுதீப் தான் இப்படத்தையும் இயக்கி இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் இதற்கு முன் நடித்த டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலிலும் ரூ.100 கோடியை கடந்தது. இதனால் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்தது. கடந்த அக்டோபர் 21-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரின்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரிலீஸ் படம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாரை மெர்சலாக்கிய காந்தாரா... ரஜினியின் காலில் விழுந்து நன்றி சொன்ன இயக்குனர் ரிஷப் ஷெட்டி

இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. படத்தில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகாததால் படத்திற்கு அதிகளவில் நெகடிவ் விமர்சனங்களே வந்தன. மறுபுறம் இப்படத்துக்கு போட்டியாக ரிலீசான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

பிரின்ஸ் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து அப்படத்தை தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்களை தற்போது பொன்னியின் செல்வன், காந்தாரா போன்ற படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதனால் பிரின்ஸ் படம் பரிதாப நிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 90 சதவீத இடங்களில் பிரின்ஸ் படம் தூக்கப்பட்டுவிட்டதாகவும், மல்டிபிளக்ஸ்களில் மட்டும் ஒன்றிரண்டு காட்சிகள் அப்படத்திற்காக திரையிடப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்காக.. டுவிட்டரில் சைலண்டாக விஜய் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

click me!