தமிழ், தெலுங்கு படங்களைப் போல் சமீப காலமாக கன்னட மொழி படங்களும் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தை இந்திய சினிமாவே கொண்டாடிய நிலையில், தற்போது மற்றுமொரு கன்னட படமான காந்தாராவை கொண்டாடத் தொடங்கி உள்ளனர். ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படம் தான் தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.
இப்படத்தை பார்த்து வியந்துபோன நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில், இப்படத்தின் இயக்குனரையும், இப்படத்தில் பணியாற்றிய குழுவினரையும் பாராட்டித் தள்ளினார். காந்தாரா இந்திய சினிமாவின் தலைசிறந்த படம் என்றெல்லாம் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். சூப்பர்ஸ்டாரின் இந்த வாழ்த்து படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.