கோப்ரா கற்றுத்தந்த பாடம்... 12 நிமிட சீனுக்கு கத்திரி போட்ட படக்குழு - ரிலீசுக்கு முன்பே உஷாரான பிரின்ஸ்

First Published | Oct 20, 2022, 3:39 PM IST

பிரின்ஸ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தற்போது கடைசி நேரத்தில் படக்குழு முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தை அனுதீப் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். தமிழகத்தில் 600 திரையரங்குகளிலும், ஆந்திராவில் 300 திரையரங்குகளிலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... மாநாடு இயக்குனரை ரிப்பீட் மோடில் கலாய்த்த SK... வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையே டுவிட்டர் கலாட்டா

Tap to resize

இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தற்போது கடைசி நேரத்தில் படக்குழு முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் நீளத்தை கத்திரி போட்டு குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆடியன்ஸுக்கு சலிப்பு தட்டிவிடக் கூடாது என்பதற்காக படத்திலிருந்து 12 நிமிட காட்சியை படக்குழு நீக்கி உள்ளதாம்.

முதலில் 2 மணிநேரம் 23 நிமிடமாக இருந்த இப்படத்தின் ரன்னிங் டைம், தற்போது 2 மணிநேரம் 11 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக படத்தின் நீளம் அதிகம் இருந்ததன் காரணமாக சில படங்கள் படுதோல்வியை சந்தித்த சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக விக்ரமின் கோப்ரா படம் 3 மணிநேரத்திற்கு மேல் ரன்னிங் டைம் கொண்டிருந்தது. அது நெகடிவ் ஆக அமைந்ததை அடுத்து படம் ரிலீசாகி இரண்டு நாட்கள் கழித்து நீளத்தை குறைத்து திரையிட்டனர். ஆனால் அதுவும் எடுபடாததால் படம் தோல்வியை சந்தித்தது. அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக பிரின்ஸ் படக்குழு ரிலீசுக்கு முன்வே அந்த மாற்றத்தை செய்துள்ளது போல தெரிகிறது.

இதையும் படியுங்கள்... அந்த நேரத்தில் மட்டும்... குழந்தைங்க என்கிட்ட இருக்கக் கூடாது - ஸ்டிரிக்ட் ஆக சொன்ன சன்னி லியோன்

Latest Videos

click me!