மிஷ்கின் இயக்கத்தில் வெளியான, முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டே, இந்த படம் படு தோல்வியை சந்தித்ததால், ராசி இல்லாத நடிகை என ஓரம் கட்ட பட்டவர். நம்பி வந்த தமிழ் திரையுலகம் வாய்ப்பு கொடுக்காததால், தெலுங்கு திரையுலகில் பக்கம் சென்றார். நடிகர் நாகசைதன்யாவுக்கு ஜோதிடயாக Oka Laila Kosam என்கிற படத்தில் நடித்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இவருக்கு அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்தது. மேலும் மிக குறுகிய காலத்தில், ஹிந்தியில் நடிகர் ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடித்த, 'மொஹஞ்சதாரோ' படத்திலும் ஹீரோயினாக நத்தார். ஆனால் பாலிவுட்டில் இவர் அறிமுகமான இந்த படமும் படு தோல்வியை சந்தித்தது.
மேலும் செய்திகள்: Parvati Nair: அஜித் பட நடிகை பார்வதி நாயர் சென்னை வீட்டில் திருட்டு!
ஆனால் தெலுங்கு திரையுலகில் வெளியான படங்கள்... அனைத்துமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அழகியலும், கவர்ச்சியிலும் மெருகேறி இவரை... ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வைக்க பலர் முயற்சித்து வருகிறார்கள்.
விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இவரது கை வசம், ஒரு தெலுங்கு படம் மற்றும் இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.