தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து இருந்தனர். இதனால் தயாரிப்பாளரும் சிவகார்த்திகேயனும் இணைந்து விநியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடியை நஷ்ட ஈடாக வழங்கினர். சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்தன.
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. மண்டேலா படத்துக்காக 2 தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை வருகிற ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Ajith Help : பொன்னம்பலம் கேட்டவுடன் அஜித் செய்த உதவி! ரியல் ஹீரோ என பாராட்டிய வில்லன் நடிகர்!
இதுதவிர சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சயின்ஸ் பிக்சன் படமான அயலான் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் சிஜி பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
ஏற்கனவே தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருவதால், அப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகி படுதோல்வி அடைந்த நிலையில், தன்னுடைய அயலான் படத்தை தீபாவளிக்கு வெளியிட்டு வெற்றியுடன் கம்பேக் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் சிவா. இந்து நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... 4 மாசத்துல ரிலீஸ் ஆகும்னு சொல்லிட்டு.. திடீரென ‘விடுதலை 2’வின் ரிலீசை தள்ளிவைத்த வெற்றிமாறன் - காரணம் என்ன?