மிமிக்ரி ஆர்டிஸ்டாக காமெடி ஷோக்களில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன், பின்னர் தொகுப்பாளராக அறிமுகமாகி அது இது எது, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து அவரை 3 படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தினார் தனுஷ்.