வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். இதையடுத்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வெற்றிகரமான மியூசிக் டைரக்டராக வலம் வந்த ஜிவி பிரகாஷ், டார்லிங் படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்.
25
சாம் ஆண்டன் இயக்கிய டார்லிங் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து, ஜிவி பிரகாஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து, இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவினாலும், திரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்கள் இவரது நடிப்புத்திறமையை மேலும் மெருகேற்றின.
35
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பேச்சிலர், செல்ஃபி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தன. தற்போது இவர் கைவசம் ஐங்கரன், இடிமுழக்கம், அடங்காதே, 4ஜி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் உள்ளன.
45
இதில் ஈட்டி படத்தின் இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ள ஐங்கரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த வாரம் வெளியாக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள அப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
55
அதன்படி அப்படம் வருகிற மே 12-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மறுநாள் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் ரிலீசாக உள்ளதால், இந்த இரு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் நேரடி மோதல் உருவாகி உள்ளது. இதில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.