AK 61 Update : ஏ.கே.61-ல் அஜித்துக்கு ஜோடி நான் தான் - கன்பார்ம் பண்ணிய லேடிசூப்பர்ஸ்டார்... குஷியான ரசிகர்கள்

Published : May 08, 2022, 10:04 AM IST

AK 61 Update : வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து அஜித்தின் ஏ.கே.61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

PREV
14
AK 61 Update : ஏ.கே.61-ல் அஜித்துக்கு ஜோடி நான் தான் - கன்பார்ம் பண்ணிய லேடிசூப்பர்ஸ்டார்... குஷியான ரசிகர்கள்

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகும் படம் ஏ.கே.61. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய இவர் தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

24

இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

34

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இதில் சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொகேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதேபோல் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

44

இந்நிலையில், மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மஞ்சு வாரியர், சமீபத்திய பேட்டியில், அஜித்தின் ஏ.கே.61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது அவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் ஆகும். ஏற்கனவே நடிகை மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Keerthy suresh :இடுப்பு தெரிய சேலை கட்டி... கவர்ச்சி அதகளம் செய்த கீர்த்தி சுரேஷ்! பட் மேக்அப் தான் ரொம்ப ஓவர்

click me!

Recommended Stories