Keerthy suresh :இடுப்பு தெரிய சேலை கட்டி... கவர்ச்சி அதகளம் செய்த கீர்த்தி சுரேஷ்! பட் மேக்அப் தான் ரொம்ப ஓவர்
Keerthy suresh : சர்காரு வாரி பட்டா திரைப்படம் வருகிற மே 12-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் மேனகா சுரேஷ். இவரது மகள் கீர்த்தி சுரேஷும் தற்போது நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆனார்.
வரிசையாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்திக்கு திருப்புமுனையாக அமைந்த படம் மகாநடி. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் திறம்பட நடித்த கீர்த்து சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.
இதையடுத்து தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஃபிளாப் ஆனதால், டோலிவுட் பக்கம் சென்றார் கீர்த்தி சுரேஷ். அங்கு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி, அடுத்ததாக சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர், நானியுடன் தசரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் வருகிற மே 12-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சர்காரு வாரி பட்டா படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி தளபதி 66 பட இயக்குனர் வம்சியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். கண்ணாடி போல் பளபளனு மின்னும் சேலையில் இடுப்பு தெரிய கட்டி வந்திருந்தார். அதில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... AR Rahman : ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்