samantha hot : கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிய சமந்தா... ஜூம் பண்ணி பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்

First Published May 8, 2022, 11:41 AM IST

samantha : பீகாக் எனும் இதழின் அட்டை படத்துக்காக நடிகை சமந்தா நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

சென்னையில் பிறந்த வளர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான சமந்தா, சில ஆண்டுகள் நடிகர் சித்தார்த்தை காதலித்தார்.

இந்தக் காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து, டோலிவுட் பக்கம் சென்ற சமந்தா, அங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் நடிகை சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்ததால், அவருக்கு நாகசைதன்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்தாண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

திருமண முறிவுக்கு பின்னர் நடிகை சமந்தாவுக்கு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பட வாய்ப்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் சமந்தா.

இவர் கைவசம் யசோதா, சகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர இந்தியில் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வரும் சமந்தா, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் 23 லட்சத்துக்கும் மேல் பாலோவர்களை கொண்டுள்ள அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பீகாக் எனும் இதழின் அட்டை படத்துக்காக நடிகை சமந்தா நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்...  கத்துன சுட்டு கொன்றுவேன்... துப்பாக்கி காட்டி மிரட்டி பாடகியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்

click me!