தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அமரன் படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் எஸ்.கே. அதில் ஒன்று மதராஸி, மற்றொன்று பராசக்தி. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் பிசியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டுக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
24
சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மதராஸி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயன் உடன் பிக் பாஸ் சாச்சனா, நடிகை ருக்மிணி வஸந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதுதவிர அவர் நடிப்பில் பராசக்தி என்கிற திரைப்படமும் தயாராகி வருகிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
34
சிவகார்த்திகேயனுக்கு குவியும் பட வாய்ப்பு
மதராஸி, பராசக்தி படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் லைன் அப்பில் மேலும் சில படங்களும் உள்ளன. அதன்படி குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் எஸ்.கே. இதில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க உள்ளார். அப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி இயக்கத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டுக்கு மாறும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை பனையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் அங்கிருந்து சென்னை ஈசிஆரில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டுக்கு குடிபெயர உள்ளாராம். சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவர் பனையூரில் உள்ள தனது வீட்டை இடித்துவிட்டு, அங்கு மாடர்ன் பங்களா ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாக பனையூரில் இருந்து ஈசிஆருக்கு மாற உள்ளாராம். பனையூரில் பல கோடி மதிப்பில் அவர் பிரம்மாண்ட பங்களா கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.