
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் ராஜு ஜெயமோகன். அவர் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் தான் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஜு உடன் சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆபிரஹாம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள் படத்தின் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
2கே கிட்ஸ், யூத் கொண்டாடுவார்கள், மற்றவர்கள் ரசிப்பார்கள், இப்படியும் ஒரு லைப் இருக்கிறதானு சிலர் பொறாமைப்படுவார்கள். 2025ல் இளமை ததும்பும் சீன்ஸ், காமெடி, நட்பு, காதல், செண்டிமெண்ட், அருமையான பாடல்கள், புது கிளைமாக்ஸ் அமைந்த சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் படம். இதில் காதல் இருக்குது, காமெடி உண்டு, நட்பும் பக்கா, குடும்ப எமோசன் உள்ளது. ராஜு நடிப்பு, 2 ஹீரோயின்கள், சரண்யா பொன்வண்ணன், தேவதர்சினி, சார்லி, மைக்கேல் நடிப்பு நச்.
இளமை நிறைந்த சீன்கள், எதிர்பாராத கிளைமாக்ஸ், பாடல்கள் அருமை. ஜென் சி, யூத், லவ்வர்கள், கல்லூரி படிப்பவர்கள் கொண்டாடுவார்கள். அந்த வாட்டர் கேன் சீன், தோசை சீன், பீட்சா சீன், ஹீட்டர் ரிப்பேர் சீன், வருங்காலத்தில் பேசப்படும். வெகுவாக ரசிக்கப்படும். இப்படி கலகலப்பாக ஒரு காதல் படம், காலேஜ் படம், காமெடி கலந்த குடும்ப படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு. 2025ல் வெற்றி படம் என பதிவிட்டுள்ளார்.
பன் பட்டர் ஜாம் இளமை துள்ளும் எமோஷனல் படம். முதல் படத்திலேயே ராஜூ அசத்தியுள்ளார். புது எனர்ஜியான படம். இறந்த காலத்தை மறந்துவிட்டு, எதிர்காலத்தை விட்டுவிட்டு, நிகழ்காலத்தில் வாழுங்க. மனதிற்கு பிடித்தவருடன் என்கிறது இந்த பன் பட்டர் ஜாம் என படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், காமெடி நிறைந்த கலகலப்பான திரைப்படம் தான் இந்த பன் பட்டர் ஜாம். ராஜு ஜெயமோகனின் நடிப்பு அருமை. சந்துரு கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இயக்குனர் ராகவ் மிர்தாத்திடம் இருந்து ஒரு நல்ல முயற்சி இந்த படம் என பதிவிட்டுள்ளார்.
பன் பட்டர் ஜாம் யதார்த்தமான ஒரு படம். நம்முடைய கல்லூரி வாழ்க்கையை ரீ கிரியேட் பண்ண மாதிரி இருந்தது. கல்லூரி செல்லும் இளைஞனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் ராஜுவின் நடிப்பு நேச்சுரலாக இருந்தது. இந்த தலைமுறையில் நடக்குற காதல் மற்றும் கல்யாணத்தோடு ஒரு நல்ல மெசேஜ் சொல்லி இருக்கிறார்கள். ஒரு பன் பட்டர் ஜாம் வச்சு இவ்ளோ பெரிய மெசேஜ் ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. இந்த படம் பார்த்து என்னுடைய நண்பர்களை எல்லாம் மிஸ் பண்ணேன். எக்ஸ் லவ்வர் நியாபகமும் வந்து போச்சு. இரண்டரை மணிநேரம் எப்படி போச்சுனே தெரியல, அவ்வளவு நல்லா திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். கேமியோ வேற லெவல்ல இருந்தது. ஜென் சி கிட்ஸ் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். காதல் படம், காலேஜ் படம், காமெடி கலந்த குடும்ப படம் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.