எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி நடிப்பில் வெளியான இப்படத்தில் காமெடி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால் ரசிகர்கள் இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இப்படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இதிலும் விமல் தான் நாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி புகழ், ரவி மரியா, சிங்கம் புலி, சார்ம்ஸ், மதுரை முத்து என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து உள்ளார்.
24
தேசிங்கு ராஜா 2
தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய கதைக்களத்தில் இப்படத்தை எடுத்துள்ளார் எழில். இப்படத்தை பி ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். செல்வா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆனந்த் லிங்க குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். கலை இயக்குனராக சிவ சங்கர் பணியாற்றி இருக்கும் இப்படம் ஜூலை 11ந் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த நெட்டிசன்கள் படத்தின் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
34
தேசிங்கு ராஜா 2 ட்விட்டர் விமர்சனம்
தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தில் டைரக்ஷன், திரைக்கதை, டயலாக், காதல் காட்சிகள் என அனைத்தும் மோசம். ஹீரோ விமலின் கதாபாத்திரம் பயனற்றதாக உள்ளது. அதேபோல் 2வது ஹீரோவாக வருபவரும் எடுபடவில்லை. விஜய் டிவி புகழ் மற்றும் ரவி மரியா ஆகியோரின் காமெடி ஓகே ரகமாக உள்ளது. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அருமையாக உள்ளது. ஆனால் அது காட்சிப்படுத்திய விதம் நன்றாக இல்லை என பதிவிட்டுள்ளார்.
தேசிங்கு ராஜா படத்தில் நிறைய காமெடியன்கள் இருந்தாலும் காமெடி குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த நெட்டிசன் ஒருவர், தேசிங்கு ராஜா 2 திரைப்படம் 100 சதவீதம் வாஷ் அவுட் என பதிவிட்டிருக்கிறார். அதேபோல் மற்றொருவர், முரட்டு அடிபோல என விமர்சித்துள்ளார். ஒரு சிலரோ சோலி முடிஞ்சது என பதிவிட்டு வருகிறார்கள். இதன்மூலம் தேசிங்கு ராஜா 2 முதல் பாகம் அளவுக்கு இல்லை என்பது அதன் விமர்சனங்கள் மூலமாகவே தெரிகிறது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எந்த அளவுக்கு சோபிக்கிறது என்பதைப் பொருத்து தான் அதன் ரிசல்ட் இருக்கும்.