60 வயதில் நடிகையை 2ம் திருமணம் செய்துகொண்டவர்; இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்

Published : Jul 17, 2025, 04:02 PM ISTUpdated : Jul 17, 2025, 10:06 PM IST

இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 68.

PREV
14
Director Velu Prabhakaran Passes Away

தமிழ் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வேலு பிரபாகரனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

24
யார் இந்த வேலு பிரபாகரன்?

இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் என்கிற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதையடுத்து 1989-ல் வெளிவந்த நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த வேலு பிரபாகரன், அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதிசய மனிதன் என்கிற பெயரில் கடந்த 1990-ம் ஆண்டு எடுத்தார். பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த அசுரன், ராஜாகிளி என இரண்டு படங்களை இயக்கினார் வேலு பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.

34
வேலு பிரபாகரன் திரைப்பயணம்

பின்னர் அருண் பாண்டியனை வைத்து கடவுள், நெப்போலியன் நடித்த சிவன், சத்யராஜின் புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய வேலு பிரபாகரனுக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இதனால் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு, நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா போன்ற படங்களில் நடித்தார் வேலு பிரபாகரன்.

44
வேலு பிரபாகரன் குடும்பம்

இவர் பி ஜெயாதேவி என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய 60வது வயதில் நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் வேலு பிரபாகரன். நடிகை ஷிர்லே தாஸ் வேலு பிரபாகரன் உடன் காதல் காதல் என்கிற திரைப்படத்தில் பணியாற்றினார். அவர் 60 வயதில் நடிகையை இரண்டாம் திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories