அதில் சில கன்டெய்னர்களை பிடிக்கவும் செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் அங்கே ஏற்பட்ட தகராறில் பிஜீ மேனனுக்கு அடிபட்டு விடுகிறது. அதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஒரு புறம் இவ்வாறு செல்ல மறுபுறம் திரைக்கலங்கள் என்றாலே காமெடி, ஆக்ஷன், என அனைத்து கதாபாத்திரங்களையும் அசால்டாக செய்யும் சிவாகார்த்திகேயனை காதல் தோல்வியால் தற்கொலை செய்யும் நபராக காட்டுகின்றனர்.
ரூ.10 லட்சம் செலவுன்னு வாங்கிட்டு குடும்பத்த அவமானப்படுத்திட்டு திரும்ப வந்த பாண்டியனின் அக்கா!
சிவா தன் காதலி ருக்மணி (மாலதி) பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்ய முயன்று, பிஜீ மேனன் இருந்த அதே மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இந்த இடத்தில் பிஜீ சிவாவை தன் வேலைக்கு பயன்படுத்த நினைக்கிறார். இந்த இடத்தில் இருந்து சிவாவும், அரசு அதிகாரியாக இருந்த பிஜீவும் சேர்ந்து என்ன செய்வார்கள் என்பதும், மற்றும் அந்த கன்டெய்னர்களில் என்ன உள்ளது என்பதும், சிவா எதனால் இந்த நிலைமையில் இருக்கிறார் என்பதே மீதி கதைக்களமாக ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன், அப்பாஸ், ரகு டகுபதி, தேவ் ராம்நாத், பிரித்வி ராஜன், பாப்ரி கோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.