இந்த விவகாரம் தொடர்பாக, ஜாய் கிரிசில்டா தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். தனது திருமண புகைப்படங்களையும், தனிப்பட்ட வீடியோக்களையும் அவர் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று புதிதாக ரங்கராஜுடன் நெருக்கமாக இருக்கும் சில படங்களை ஜாய் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "'வாழ்க்கை துணை' என்று அழைப்பார்கள்... பிறகு..." என்று ஒரு சிரிப்பு எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இரண்டு படங்களில் இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே நடந்த திருமணத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து, "'கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய். இதுதானா உன் அன்பு அறிமுகம்...???" என்றும் உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.