மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

Published : Sep 06, 2025, 05:34 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

PREV
14
Madharaasi Official Box Office

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதுதவிர வித்யூத் ஜமால், மலையாள நடிகர் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரியளவில் ஆரவாரமின்றி மதராஸி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

24
பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால் அடுத்த தளபதி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயன் கொண்டாடப்பட்டு வருகிறார். இதனால் அவரை சிலர் திடீர் தளபதி என்றும் விமர்சித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன் தான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளை தான் என கூறி இருந்தார். தமிழ் சினிமாவி ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்தபடியாக அதிக வசூல் அள்ளிய ஹீரோ என்றால் அது சிவகார்த்தியேகன் தான். அவரை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றது அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன்.

34
மதராஸிக்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ்

அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் மதராஸி ரிலீஸ் ஆனதால், இப்படத்தின் பிசினஸ் பெரியளவில் இருந்தாலும், வசூலில் இப்படம் அமரன் அளவுக்கு சோபிக்குமா என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது. அந்த படம் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே கணிசமாக வசூலித்துள்ளது மதராஸி. இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், இப்படம் வரும் நாளில் மேலும் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
மதராஸி முதல் நாள் வசூல்

இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.12.8 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது. அமரன் படத்தோடு ஒப்பிடுகையில் இது கம்மி தான். அமரன் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியலில் மதராஸி இரண்டாம் இடத்தில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories