வெங்கட் பிரபுவை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட சிவகார்த்திகேயன்; கோட் பட ரிசல்ட் தான் காரணமா?

First Published | Oct 28, 2024, 12:12 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தை கிடப்பில் போட்டுள்ளாராம்.

sivakarthikeyan, venkat Prabhu

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி கண்டவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

Sivakarthikeyan

அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.23 திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... மேஜர் முகுந்த் வரதராஜனாக மாறி தேச பக்தியை கண் முன் நிறுத்திய சிவகார்த்திகேயன்; 'அமரன்' ட்ரைலர் இதோ!

Tap to resize

Sivakarthikeyan next movie

ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக தன்னுடைய அடுத்த பட இயக்குனரை மாற்றி இருக்கிறார் எஸ்.கே. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் அள்ளிய டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் இயக்க உள்ளாராம். அவர் இயக்கத்தில் நடித்து முடித்ததும் சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இதனால் வெங்கட் பிரபு படம் மேலும் தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Director Venkat prabhu

வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தின் கேமியோ ரோலில் வந்த சிவகார்த்திகேயன், தற்போது அவரது படத்தை டீலில் விட்டுள்ளதற்கு கோட் பட ரிசல்ட் தான் காரணமா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. கோட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டு எஸ்.கே வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க சென்றிருக்க கூடும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ படத்தை கைவிடாமல் இருந்தா சரி என்பது தான் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது.

இதையும் படியுங்கள்... 'அமரன்' பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்! வெளியானது அச்சத்தில் புரமோ!

Latest Videos

click me!