இவங்கள வெளிய அனுப்பியே ஆகணும்; கட்டம் கட்டிய பாய்ஸ் டீம்! இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 8 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், இரண்டாவது வார இறுதியில் அர்னவ்வும், மூன்றாவது வார இறுதியில் தர்ஷா குப்தாவும் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர்.

Sunitha Nominated

பிக்பாஸ் வீட்டில் தற்போது பவித்ரா, சாச்சனா, ஜாக்குலின், தர்ஷிகா, ஆனந்தி, சுனிதா, செளந்தர்யா, அன்ஷிதா, ஜெஃப்ரி, அருண் பிரசாத், சத்யா, விஜே விஷால், முத்துக்குமரன், ரஞ்சித், தீபக் ஆகிய 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் சிக்கி உள்ளது யார்... யார் என்கிற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த முறை ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்... தர்ஷா குப்தாவுக்கு சம்பளத்தை வாரி வழங்கிய பிக்பாஸ்; 20 நாளுக்கு இத்தனை லட்சமா?


Jacquline

இதையடுத்து ஆண்கள் அணியினர் அதிகம் டார்கெட் செய்த போட்டியாளர் என்றால் அது மூவர் தான். அதன்படி ஜாக்குலின், பவித்ரா, சுனிதா ஆகியோரை தான் பெரும்பாலான ஆண் போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். இதில் ஜாக்குலின், அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பது போல் உள்ளதாக கூறி ஆண்கள் நாமினேட் செய்துள்ளனர். அடுத்ததாக சுனிதாவை நாமினேட் செய்த ஆண்கள், அவர் தான் பேசுவதை தான் எப்போதும் சரி என நினைப்பதால் அவரை நாமினேட் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Ranjith

அதேபோல் பெண்கள் அணியினர் ஆண்கள் அணியில் இரண்டு போட்டியாளர்களை போட்டி போட்டு நாமினேட் செய்துள்ளனர். அவர்கள் வேறுயாருமில்லை கானா ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித் தான். ஜெஃப்ரி ஒரு குறிப்பிட்ட கும்பலுடன் இருப்பதாக கூறி அவரை பெண்கள் நாமினேட் செய்துள்ளனர். அடுத்ததாக ரஞ்சித்தை அதிகளவில் நாமினேட் செய்துள்ள பெண்கள், அவர் சைலண்டாக இருப்பதாவும், நல்ல பெயரெடுக்க முயல்வதாகவும் கூறி நாமினேட் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த வனிதா; வறுத்தெடுக்கப்பட்ட அர்னவ் - இறுதியில் என்ன ஆச்சு?

Latest Videos

click me!