தமிழ் சினிமாவில் வெற்றியை மட்டுமே ருசித்த ஒரு நடிகை என்றால் அது ஷாலினி தான். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்துவந்த ஷாலினி, ஹீரோயினாக தமிழில் நடித்தது வெறும் 5 படங்கள் தான். இந்த ஐந்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதில் அவர் முதன்முதலில் நடித்த படம் காதலுக்கு மரியாதை. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. இப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு என்கிற படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் ஷாலினி.