கவின் - நயன்தாரா படத்துக்கு இரண்டே எழுத்தில் வைக்கப்பட்ட ஷார்ட் அண்ட் ஸ்வீட் டைட்டில்

First Published | Oct 28, 2024, 11:13 AM IST

கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள திரைப்படத்திற்கு இரண்டே எழுத்தில் வைக்கப்பட்டுள்ள டைட்டில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kavin, Nayanthara

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டது வெகு சிலரே. முதல் சீசனில் ஓவியாவுக்கு கிடைத்த பாபுலாரிட்டிக்கு அவர் அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராகவே ஆகி இருக்கலாம். ஆனால் அவர் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டார். அதனால் தற்போது பட வாய்ப்புகள் இன்றி திண்டாடி வருகிறார். ஆனால் பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர்.

Kavin

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த சீசனில் அதிக ரசிகர்களை சம்பாதித்த போட்டியாளரும் கவின் தான். அந்த சீசனில் இறுதிவரை இருந்திருந்தால் டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு மவுசு இருந்தும் 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார் கவின். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. அதில் சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததால் அவரது படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன.

இதையும் படியுங்கள்... 34 வயசு கவினுக்கு ஜோடி... 38 வயசு யஷ்ஷுக்கு நயன்தாரா அக்காவா? டென்ஷனான லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

Tap to resize

Kavin next Movie

டாடா, லிஃப்ட், ஸ்டார் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த கவின், அடுத்ததாக பிளெடி பெக்கர் என்கிற படத்தில் நடித்துள்ளார். நெல்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிவபாலன் இயக்கி உள்ளார். இப்படத்தில் கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் கவின் கைவசம் கிஸ், ஆண்ட்ரியா உடன் ஒரு படம், நயன்தாரா ஜோடியாக ஒரு படம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

kavin, nayanthara Movie Title Hi

இந்த நிலையில், கவின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் என்பவர் தான் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘ஹாய்’ என இரண்டே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இப்படி ஒரு பாட்டு பாத்திருக்கவே மாட்டீங்க; கவினின் Bloody Beggar - வெளியானது Beggar Waala சாங்!

Latest Videos

click me!