விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து தனுஷுடன் 3 மற்றும் அவர் தயாரித்த எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்து வெற்றிகண்ட எஸ்.கே.வுக்கு பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
24
sivakarthikeyan wedding photo
கடின உழைப்பால் முன்னேறிய சிவகார்த்திகேயன் டாக்டர், டான் என இரண்டு படங்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தினார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. சிவகார்த்திகேயன் கைவசம் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் உள்ளன.
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்.கே.21 திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவா. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
44
sivakarthikeyan wedding anniversary photo
எஸ்.கே.21 படத்தின் படப்பிடிப்பை விறுவிறுவென முடித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை வந்ததற்கு காரணம் இன்று அவரது திருமண நாளை கொண்டாட தான். அதன்படி தன் மனைவி ஆர்த்தியை கட்டியணைத்தபடி எடுத்த ரொமாண்டிக் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, என் சந்தோஷ கண்ணீரா’ என கேப்ஷனும் கொடுத்து தன் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் எஸ்.கே. சிவகார்த்திகேயனின் இந்த ரொமாண்டிக் புகைப்படத்துக்கு லைக்குகள் குவிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.