யார் சாமி இவரு... வீட்டுக்குள் 6 தென்னை மரம் வளர்க்கும் மன்சூர் அலிகான்; பாத்ரூம்லயும் ஒன்னு இருக்காம்

First Published | Aug 27, 2023, 1:10 PM IST

லியோ பட நடிகர் மன்சூர் அலிகான், தனது வீட்டுக்குள் 6 தென்னை மரங்களை வளர்த்து வருவதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

Mansoor Ali khan house tour

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் மன்சூர் அலிகான். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மன்சூர் அலிகான். இதுதவிர சந்தானுத்துடன் கிக் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

mansoor ali khan

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான் தான். இதைப் பல பேட்டிகளில் அவரே கூறி இருக்கிறார். மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எழுதினாராம் லோகேஷ். அந்த சமயத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதால் தான் கார்த்தியை வைத்து அப்படத்தை எடுத்தார் லோகேஷ்.

Tap to resize

Actor mansoor ali khan

கைதி படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டியில் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, அந்த சமயத்தில் தான் ஜெயிலுக்கு சென்று நிஜ கைதியாக இருந்ததால், தன்னால் ரீல் கைதியில் நடிக்க முடியவில்லை என கூறி இருந்தார். இருப்பினும் மன்சூர் அலிகானை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற லோகேஷின் ஆசை கைதி படத்தில் மிஸ் ஆனாலும் அதனை லியோ படத்தின் மூலம் பூர்த்தி செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... மகன்களுக்கு பட்டுவேட்டி கட்டிவிட்டு... ஓணம் விருந்து ஊட்டிவிட்ட நயன்தாரா - விக்கி பகிர்ந்த கியூட் போட்டோஸ் இதோ

Trees in Mansoor Ali khan house

மன்சூர் அலிகான் என்றாலே அவரின் வெளிப்படையான பேச்சு தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சென்று அவரது ஹோம் டூர் வீடியோ ஒன்றை எடுத்தது. அதில் இடம்பெற்ற ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவரது வீட்டுக்குள் 6 தென்னை மரங்கள் இருந்தது தான்.

Leo Actor mansoor ali khan

வீட்டுக்கு வெளியே மரம் வளர்த்து பார்த்திருப்போம், ஆனால் வீட்டுக்குள்ளேயே மரம் வளர்த்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மன்சூர் அலிகான், அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். தனக்கு மரங்களை வெட்டுவது பிடிக்காது என்றும், அதன்காரணமாகவே மரத்தை வெட்டாமல் அதற்காக வீட்டுக்குள்ளேயே இடம் விட்டு கட்டி இருப்பதாக கூறினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவரது வீட்டு பாத்ரூமில் கூட ஒரு தென்னை மரம் இருக்கிறது. மன்சூர் அலிகானின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்...   யூடியூபரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனி - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Latest Videos

click me!