yash
கன்னட திரையுலகம் அசுர வளர்ச்சி கண்டதற்கு முக்கிய காரணம் கே.ஜி.எப் திரைப்படம் தான். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் இதுவரை 2 பாகங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு பாகங்களுமே வேறலெவலில் வரவேற்பை பெற்று மாஸ் ஹிட் அடித்தன. குறிப்பாக கடந்தாண்டு வெளிவந்த கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Yash family Varamahalakshmi pooja
கே.ஜி.எப் படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து அப்படம் மூலம் உலகளவில் பேமஸ் ஆனவர் தான் யாஷ். அவரை யாஷ் என்று சொல்வதைவிட ராக்கி பாய் என்று கூறினால் தான் தெரியும், அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
Radhika pandit
அவர் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரியவந்தது. அதேபோல் பி.எஸ்.மித்ரனும் யாஷுக்கு கதை சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதுதவிர பிரசாந்த் நீலும் கே.ஜி.எப் மூன்றாம் பாகத்தின் கதையை தயார் செய்து வருகிறார். இதில் யார் யாஷின் அடுத்தபடத்தை இயக்க உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.