முடிவுக்கு வந்த பராசக்தி டைட்டில் பிரச்சனை! நடந்தது என்ன?
சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தின் டைட்டில் பிரச்சனை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தின் டைட்டில் பிரச்சனை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்திற்கு படக்குழு பராசக்தி என்று டைட்டில் வைத்தது. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா ஆகிய பலர் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனி நடிக்கும் 25ஆவது படத்திற்கும் 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தமிழில் 'சக்தி திருமகன்' என்றும், தெலுங்கில் பராசக்தி என்றும் டைட்டில் வைக்கப்பட்டது. இது பெரும் பூகம்பமாக வெடித்தது.
சிவகார்த்திகேயனின் மூவி டைட்டில் PARASAKTHI, இதே போன்று விஜய் ஆண்டனியின் தெலுங்கு மூவி டைட்டில் PARAASHAKTHI. 2 படங்களிலும் வெவ்வேறு ஸ்பெல்லிங் இருப்பதாக நெட்டிசன்கள் கூறினர். இந்த டைட்டில் சர்ச்சை விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. இதற்கு ஒரே ஒரு காரணம் என்னவென்றால் விஜய் ஆண்டனியின் தெலுங்கு டைட்டில் தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய குறும்படம் 'அனுஜா' OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில் தான் பராசக்தி பட சர்ச்சைக்கு சிவகார்த்திகேயனின் பட தயாரிப்பாளரான டான் பிக்ஸர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், பராசக்தி படத்தை தயாரிக்கும் விஜய் ஆண்டனி மற்றும் இந்த படத்தின் இயக்குநர் அருண் பிரபு ஆகியோர் சந்தித்து பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு எடுத்துள்ளனர்.
அதாவது, சிவகாத்திகேயனின் நடிப்பில் உருவாகும் அவரது 25ஆவது படமான பராசக்தி படத்திற்கு தமிழ், தெலுங்கில் பராசக்தி என்றே டைட்டில் வைத்துள்ளனர். இதே போன்று விஜய் ஆண்டனியின் 25ஆவது படமான சக்தி திருமகன் படத்திற்கு இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் பராசக்தி என்றும் டைட்டில் வைத்துள்ளனர். தெலுங்கிற்கு மட்டும் வேறொரு டைட்டில் வைக்க இந்த சமரச பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் சொன்ன வார்த்தை; 90 கோடி நஷ்டம் குறித்து முதல் முறையாக பேசிய சேவியர் பிரிட்டோ!
இதற்கு ஏவிஎம் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பது. அதில், பராசக்தி டைட்டில் உரிமை டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று அறிக்கை வெளியிட்டது. இதை உறுதி செய்யும் விதமாக ஆகாஷ் பாஸ்கரனும் இன்று, தன்னுடைய அறிக்கை வெளியிட்டு 'பராசக்தி' திரைப்பட தலைப்பு தங்களுக்கு சொந்தமானது என உறுதி செய்துள்ளார்.