பிக் பாஸ் சீசன் 8ன் ரெளடி பேபி! இந்த க்யூட் குழந்தை யாருன்னு தெரியுதா?

Published : Jan 30, 2025, 03:17 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறி நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
15
பிக் பாஸ் சீசன் 8ன் ரெளடி பேபி! இந்த க்யூட் குழந்தை யாருன்னு தெரியுதா?
யார் இந்த பிக் பாஸ் 8 போட்டியாளர்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த 8-வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அவர் இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் மக்களின் மனதை வென்ற பெண் போட்டியாளர் ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

25
பிக் பாஸ் பைனலிஸ்ட்

அந்த போட்டியாளர், எதுவுமே செய்யாமல் பைனல் வரை சென்றுவிட்டார் என்கிற விமர்சனமும் அவர் மீது வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பிஆர் வைத்து தான் அவர் இறுதி வரை முன்னேறி சென்றதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதையெல்லாம் கடந்த இறுதி மேடையில் நின்ற அந்த பெண் போட்டியாளர் ஜஸ்ட் மிஸ்ஸில் டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இதனால் அந்த டைட்டில் முத்துக்குமரனுக்கு சென்றது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிஞ்சதுமே ஆரம்பிச்சிடீங்களா? சௌந்தர்யாவின் புகைப்படத்துக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்!

35
செளந்தர்யா குழந்தைப்பருவ புகைப்படம்

அந்த பெண் போட்டியாளர் வேறுயாருமில்லை... செளந்தர்யா தான். அவர் இந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்ததும், அவரின் குரலை சக போட்டியாளர்களே கிண்டல் அடித்தனர். பின்னர் விஜய் சேதுபதி தான் உங்க வாய்ஸ் தான் உங்க பிளஸ் என சொல்லி அவருக்கு ஊக்கம் அளித்தார். பின்னர் செளந்தர்யா செய்யும் குறும்புத்தனமான விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் அவரை கொண்டாட ஆரம்பித்தனர்.

45
பிக் பாஸ் செளந்தர்யா

பைனல் மேடையில் கூட விஜய் சேதுபதி வெற்றியாளரை அறிவித்த பின்னர், நீங்க என் கையை தூக்கிவிடுவீர்களோ என தான் பயந்துகொண்டிருந்ததாக கூறிய செளந்தர்யா, முத்துக்குமரன் தான் இந்த டைட்டிலுக்கு தகுதியானவர் என பேசியது அவரது தங்கமான மனசை காட்டியது. பிக் பாஸ் வரலாற்றிலேயே தன்னுடைய காதலனுக்கு நிகழ்ச்சியின் போதே புரபோஸ் செய்த ஒரே போட்டியாளர் செளந்தர்யா தான்.

55
செளந்தர்யாவின் அரிய புகைப்படம்

விஷ்ணுவை காதலிக்கும் செளந்தர்யா, ஃப்ரீஸ் டாஸ்கில் அவர் உள்ளே வந்தபோது தனது காதலை வெளிப்படுத்தினார். இப்படி பிக்பாஸ் மூலம் மக்கள் மனதை வென்ற செளந்தர்யா, ஸ்கூல் படிக்கும் போது எடுத்த செம க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. அதைப்பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் ரெளடி பேபியாக வலம் வந்த செளந்தர்யாவா இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... யார் இந்த தங்கப்புள்ள? பிக் பாஸ் 8 மூலம் மக்கள் மனதை வென்ற இந்த நடிகை யாருன்னு தெரியுதா?

click me!

Recommended Stories