விஜய் சொன்ன வார்த்தை; 90 கோடி நஷ்டம் குறித்து முதல் முறையாக பேசிய சேவியர் பிரிட்டோ!

Published : Jan 30, 2025, 02:50 PM IST

விஜய்க்கும், எனக்கும் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை என்று சேவியர் பிரிட்டோ தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.  

PREV
15
விஜய் சொன்ன வார்த்தை; 90 கோடி நஷ்டம் குறித்து முதல் முறையாக பேசிய சேவியர் பிரிட்டோ!
விஜயகாந்த் மற்றும் விஜய் காம்போ:

விஜயகாந்த் மற்றும் விஜய் ஆகியோரது காம்போவில் வந்த படம் தான் செந்தூரபாண்டி. இந்த படத்தில் விஜயகாந்திக்கு தம்பியாக நடித்து சினிமாவில் தனி மார்க்கெட் பிடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் விஜய். இந்த படத்திற்கும் விஜய்யின் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அது என்னவென்றால், படத்தை இயக்கியது விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர். படத்தின் கதை எழுதியது விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர். படத்தை தயாரித்தவர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ.
 

25
சேவியர் பிரிட்டோ தயாரித்த படங்கள்

இவர், செந்தூரபாண்டி மட்டுமல்லாமல் மாஸ்டர், புது புது அர்த்தங்கள், நேசிப்பாயா ஆகிய படங்களை தயார்த்திருக்கிறார். இவர் ஒரு தயாரிப்பாளர் மட்டுமின்றி, கல்லூரியின் பேராசிரியராக இருந்து தலைவரானவர். சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு இண்டேவ் குழும நிறுவனங்களில் நுழைந்தார். இந்த நிலையில் தான் இவர் அளித்த பேட்டி ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

6 நாளில் 'வணங்கான்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'குடும்பஸ்தன்'!

35
விஜய்யின் பினாமியா?

விஜய்யின் பினாமி தான் சேவியர் பிரிட்டோ என்று சோஷியல் மீடியாவில் ஒரு டாக் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது சேவியர் பிரிட்டோ விளக்கம் கொடுத்துள்ளார். 

45
விஜய்க்கும் சேவியர் பிரிட்டோவுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்?

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "விஜய்யின் அப்பாவும், என்னோட மாமியாரும் சகோதர சகோதரிகள். விஜய் சினிமாவில் அறிமுகம் ஆன போதே அவரை என்ககு தெரியும். எஸ் ஏ சி எடுத்த செந்தூரபாண்டி படத்திற்கு நிதி பிரச்சனை இருந்தது. அப்போது தான் என்னை அவர் அணுகினார். அந்த படத்தை நான் தான் தயாரித்தேன். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு ரசிகன் படத்தை என்னை தயாரிக்க சொன்னார்கள். சினிமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய மனைவி கால்பந்தாட்ட போட்டியை தொடங்கினார். ஆனால், அதில் எங்களுக்கு ரூ.90 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அப்போது தான் விஜய் தன்னோட படத்தை என்னை தயாரிக்க சொன்னார். அவ்வளவு தான், நான் அவருடைய பினாமி எல்லாம் இல்லை. தொழில் ரீதியாக கூட எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் கடுத்துள்ளார்.

'ஜன நாயகன்' படத்திற்காக ஹெச் வினோத்திடம் விஜய் வைத்த டிமாண்ட்!

55
ஆகாஷ் முரளி நடித்த நேசிப்பாயா

சேவியர் பிரிட்டோ கடைசியாக, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த நேசிப்பாயா படத்தை தயாரித்திருந்தார். விஷ்ணு வரத்தான் இயக்கி இருந்த இந்த படத்தில், அவரின் மாப்பிள்ளையாக ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்திருந்தார். அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வியை சந்தித்தது.
 

click me!

Recommended Stories