நடிகர் மணிகண்டன் நடிப்பில், கடந்த வாரம் வெளியான 'குடும்பஸ்தன்' திரைப்படம் 6 நாட்களில் பாலா இயக்கத்தில் வெளிவந்த வணங்கான் படத்தின் வசூலை மிஞ்சி விட்டதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக பிக் பட்ஜெட் படங்களை விட, ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், நல்ல லாபத்தை ஈட்டி கொடுக்கிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ350 கோடி பட்ஜெட்டில் வெளியான 'கேம் சேஞ்சர்' மற்றும் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில், வெறும் ரூ.15 கோடியில்,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 'மதகஜராஜா' திரைப்படம் திரையரங்கையே கலக்கி வருகிறது.
25
விஷால் - சுந்தர் சி காம்போ
விஷால் - சுந்தர் சி காம்போவில் வெளியான இந்த திரைப்படம், தற்போது வரை ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியை தற்போது பட குழுவினர் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் சுந்தர் சியின் பிறந்தநாள் மற்றும் 'மதகஜராஜா' படத்தின் வெற்றி விழாவை பார்ட்டி வைத்து இயக்குனர் சுந்தர் சி கொண்டாடியிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
கடந்தாண்டு சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பூ தயாரிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளிய நிலையில், மதகஜராஜா திரைப்படமும் இதே அளவிலான வசூலை எட்டுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
45
அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்யும் மணிகண்டன்
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி, தன்னுடைய வெற்றியை பதிவு செய்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம். இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் உருவாக்கி உள்ள இந்த படத்தில், ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பால் பிரமிக்க வைத்த நடிகர் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படத்திற்கும் அதிக அளவிலான வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒரு சாதாரண குடும்ப தலைவனின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை காமெடியோடு இயக்கி உள்ளார் இயக்குனர். பணம் என்பது ஒரு குடும்பத்திற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும், அதை நேரம் பணத்தை தாண்டி ஒரு குடும்பம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் இந்த படத்தின் மூலம் விளக்கி உள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை 6 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது வரை இந்த திரைப்படம் 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' திரைப்படம் இதுவரை 9 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், பாலாவின் படத்தின் வசூலையே 'குடும்பஸ்தன்' திரைப்படம் மிஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.