
கோலிவுட் திரை உலகில், ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் விஜய், கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில், அதிகம் அரசியல் பேசி வந்தார். தமிழகத்தை ஆளும் காட்சிகளை நேரடியாகவே விமர்சித்தார். எனவே விஜய் அரசியலில் இறங்க உள்ளாரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழத் துவங்கியது.
இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் விஜய் பல அரசியல் மற்றும் மக்கள் பணிகளில் தன்னுடைய ரசிகர்களை ஈடுபட வைத்தார். விஜயின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், கடந்தாண்டு அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார் தளபதி.
மேலும் தன்னுடைய கட்சி கொடி, கட்சியின் பாடல், என துவங்கி... தற்போது மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். இதுவரை 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மற்ற தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்கள் பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாளர், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி பணிகளுக்கான பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் நேர்காணலிலும் ஈடுபட்டார்.
எங்க வீட்டுலையே என்ன Kidnap பண்ணி அங்க தூக்கிட்டு போனாங்க; ஷாக் கொடுத்த நடிகர் மணிகண்டன்!
பனையூரில் நடந்த இந்த கட்சியின் கூட்டத்தில், நடிகர் விஜய் கலந்து கொள்ள வந்த போது எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகின. கூடிய விரைவில் விஜய் இரண்டாவது கட்ட மாவட்ட செயலாளர்கள் குறித்து அறிவிப்பாளர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமாக உருவாகும் 'ஜன நாயகன்' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் கங்குவா, அனிமல், போன்ற படங்களில் நடித்து பிரபலமான பாபி தியோல் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.
பாலாவின் சினிமா வாழ்க்கையில் மோசமான வசூல்; வணங்கான் பட மொத்த கலெக்ஷனே இவ்வளவு தானா?
இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், மமீதா பைஜூ, டிஜே அருணாச்சலம், உள்ள மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளியை குறிவைத்து, அக்டோபர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில்... அவ்வபோது இந்த படக் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது, இயக்குனர் ஹெச் வினோத், நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்கும் முன் தனக்கு வைத்த டிமாண்ட் குறித்து பேசி உள்ளார். இந்த படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்ட பின்னர், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் என்னை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய டிமாண்ட் ஒன்றை வைத்தார். விஜய் தன்னிடம் பேசும் போது " என்னுடைய படத்தை, அனைத்து வயதினரும், அரசியல் கட்சியினரும் பார்க்கும்படி இருக்க வேண்டும். அதனால் இப்படத்தில் யாரையும் தாக்கும் வகையில் காட்சிகளை வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த தகவலை சமீபத்தில் இயக்குனர் ஹெச் வினோத் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!