Published : Jan 30, 2025, 10:51 AM ISTUpdated : Feb 13, 2025, 12:47 PM IST
'ஜெய்பீம்', 'குடும்பஸ்தன்' போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்ற நடிகர் மணிகண்டன், தன்னுடைய வீட்டிலேயே தன்னை கிட்னாப் செய்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனாகவும், நம்பிக்கை நாயகனாகவும் மாறி இருப்பவர் தான் மணிகண்டன். விஜய் டிவியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான 'கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில்' போட்டியாளராக பங்கேற்ற இவருக்கு, பெரிதாக வரவேற்பு கிடைக்காமல் போனது. இதைத் தொடர்ந்து 'பீட்சா 2 வில்லா' திரைப்படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர் ரோலில் நடித்த மணிகண்டன், இந்த படத்திற்கு ஸ்கிரீன் ஸ்கிரீன் ப்ளே ரைட்டராகவும் பணியாற்றினார்.
26
திரைக்கதையில் ஆசிரியர்:
இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, சில திரைப்படங்களுக்கு கதை எழுதி வந்தார். அந்த வகையில் இவர் எழுதிய திரைக்கதையில் வெளியான விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
2022 ஆம் ஆண்டு வெளியான 'நரி எழுதும் சுயசரிதம்' என்கிற திரைப்படத்தையும் மணிகண்டன் இயக்கி உள்ளார். கூடிய விரையில் நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து, மணிகண்டன் ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே கதையை கேட்டு விஜய் சேதுபதி ஓகே சொல்லி விட்டதால், தயாரிப்பாளர் கிடைத்தவுடன், இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
46
சிறந்த அறிமுகம் கொடுத்த காலா
பன்முக திறமையாளராக இருந்து வரும் மணிகண்டன், சமீபகாலமாக நடிப்பிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பல படங்களில் சப்போர்டிங் ரோலில் நடித்து வந்த மணிகண்டனுக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது, இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் வெளியான காலா திரைப்படம். இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகனாக மணிகண்டன் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'ஜெய் பீம்' படம் மணிகண்டனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. தன்னுடைய கதை தேர்வில் மிகவும் கவனமாக இருக்கும் மணிகண்டன், கடந்த 2023 ஆம் ஆண்டு நடித்த குட் நைட், 2024-ல் நடித்த லவ்வர், 2025-ல் நடித்த குடும்பஸ்தன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
66
வீட்டிலேயே என்னை கடத்தினார்களா?
தற்போது திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'குடும்பஸ்தன்' பட ப்ரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட போது, நடிகர் மணிகண்டன் கூறிய ஒரு தகவல் தான் தற்போது பல ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. " அதாவது நடிகர் மணிகண்டனுக்கு, சாமி நம்பிக்கை என்பது சுத்தமாக கிடையாதாம். ஆனால் அவருடைய வீட்டில் அதீத கடவுள் பக்தியோடு இருப்பார்களாம். நேரடியாக கோவிலுக்கு தன்னை வர சொன்னால் நான் வரமாட்டேன் என்று புரிந்து கொண்டவர்கள், ஒரு தடவை என்னை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்து போடணும்னு சொல்லி கிட்னாப் பண்ணி கோயிலுக்கு தூக்கிட்டு போனாங்க என மணிகண்டன் கூறியுள்ளார். இந்த தகவல் கேட்பதற்கு சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும், கோயிலுக்கு உங்களை கிட்னாப் பண்ணி கூட்டிட்டு போனார்களா? என அதிர்ச்சியோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.