ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கத்தை பேசும் படம்; கராத்தே பாபு இயக்குனர் சொன்ன தகவல்!

Published : Jan 30, 2025, 04:02 PM IST

இயக்குநர் கணேஷ் கே பாபு, ரவி மோகனை வைத்து 'கராத்தே பாபு' என்ற அரசியல் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்க்கையை அலசுகிறது.

PREV
15
 ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கத்தை பேசும் படம்; கராத்தே பாபு இயக்குனர் சொன்ன தகவல்!
கராத்தே பாபு

டாடா படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் கே பாபு. கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கணேஷ் பாபு ரவி மோகனை 'கராத்தே பாபு' அரசியல் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

25
ரவி மோகனின் 34வது படம்

பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் கை கோர்த்துள்ளது.. 

சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.

35
சட்டமன்ற உறுப்பினரின் வாழ்க்கை

படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இந்த உருவாகி வருகிறது," என்று தெரிவித்தார். 

ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கு காரணம் ரவி மோகன் வழங்கும் முழு ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் தான். இதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.  

45
டீசர்

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு  எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

55
மற்ற நடிகர்கள்:

வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா ஆகியோர் நடித்துள்ளார்.

click me!

Recommended Stories