நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலிப் குமார் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’.
இந்த படத்தில், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் பிரியங்கா அருள் மோகன் (Priyanka Arul Mohan ) கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay ), பிக்பாஸ் அர்ச்சனா, தீபா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மத்தியில் இப்படம் வெளியானது.
இப்படத்தில் காமெடி சீன்களுக்கு குறைவில்லை என கூறப்பட்டாலும், கோலமாவு கோகிலா பாடத்தை சற்று மாற்றி 'டாக்டர்' என்கிற பெயரில் நெல்சன் எடுத்துள்ளதாக பல விமர்சனங்களும் வந்தது.
இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் 8 கோடிக்கும் மேல் வசூல் செய்ததை தொடர்ந்து, தற்போது இதுவரை தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் இதுவரை சுமார் 50 கோடி வசூல் செய்துள்ளதாம். கொரோனா இரண்டாவது அலைக்கு பின்பு திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியாகி இவ்வளவு வசூல் செய்துள்ளது சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.