ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. வீரத்தமிழச்சி என்ற பட்டப்பெயரையும் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அப்படிப்பட்ட ஜூலி விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதலில் மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.
ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் செய்த வேலைகளால் ரசிகர்கள் நாறு நாறாக கிழிக்க ஆரம்பித்தனர். ஆதரவாளர்கள் குறைந்து ஹேட்டர்ஸ்களை அதிகப்படுத்திக் கொண்டார் ஜூலி. இன்று வரை சோசியல் மீடியாவில் ஹேட்டர்ஸ்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்ட ஜூலி தற்போது முன்னணி நடிகைகளே மிரளும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வலை விரித்து வருகிறார்.
சில படங்களில் கமிட்டாகி நடித்தார். ஆனால் இவர் நடித்த படம் ஒன்று கூட தற்போது வரை வெளியாகவில்லை. அதே போல் நீட் தேர்வால் உயிர் விட்ட மனைவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் இவர் நடிக்க உள்ளதாக கூறி வெளியான தகவல்களுக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர் இந்த படத்தில் இருந்து ஜூலி நீக்க பட்டாரோ இல்லையோ... படமே முழுவதும் கைவிட பட்டது. தற்போது வரை இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி, அங்கு விதவிதமான கெட்டப்புகளில் எடுக்கப்படும் போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு சூப்பர் மாடல் ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.
கவர்ச்சிக்கு குறை வாய்க்காத அளவுக்கு அல்ட்ரா மார்டன் உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
என்ன தான் நெகட்டிவ் கமெண்ட் போட்டு கலாய்க்கு ஹேட்டர்ஸ் அதிகமாக இருந்தாலும், தன்னைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்களுக்காக ரக ரகமாய் போட்டோ ஷூட் எடுத்து தள்ளுகிறார்.
விட்டால் பிகினி உடை அணிந்து புகைப்படம் போடும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வரும் ஜுலீ, தற்போது... படு மோசமான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, தமிழ்நாட்டின் மியா என்கிற கூறி நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.