வாகா எல்லையில் கையில் தேசியக்கொடியோடு தல அஜித்..! வைரலாகும் புகைப்படம்..!

First Published | Oct 20, 2021, 10:41 AM IST

பைக் ரைடிங் பிரியரான தல அஜித் (AjithKumar), தற்போது வாகா எல்லையில் கையில் தேசிய கொடியுடனும், ராணுவ வீரர்களுடனும் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தல அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது, அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீப காலமாகவே, ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்தார்.

Tap to resize

சமீவனத்தில் டெல்லி சென்ற அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்தார் அஜித்.

அதாவது பைக்கில் 7 continents, 64 countries -சை சுத்தி வந்த மாரல் யாசர்லூ என்கிற சாகச பெண்ணை தல அஜித் சந்தித்து பேசினார். அவரிடம் பைக்கில் டிராவல் செஞ்ச அனுபவங்கள் பத்தியும் விவரமாக கேட்டு தெரிந்து கொண்டதாக  அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவே சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்தார்.

பின்னர் அஜித் மாரல் யார்சலூவுடன் எடுத்து கொண்ட மற்ற சில புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் அஜித் பைக்கில் உலகம் முழுவதும் சுற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி பலரை ஆச்சரியப்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் அஜித் பைக்கிலேயே வாகா எல்லை வரை சென்று திரும்பியிருக்கிறார். அவர் அங்கு கையில் தேசிய கொடியோடும், ரணுவ வீரர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!