சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு கொரோனா லாக் டவுன் சமயத்தில் தான் குழந்தை பெற்றதாகவும், குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிறது என, வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இதை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது ஸ்ரேயா தன்னுடைய குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள ஸ்ரேயா... "முதலில் குழந்தை பிறந்த தகவலை என் அம்மாவிடம் கூறினேன். “அவர் ஓ ராதா ராணி வருகிறாள்“ என்று மகிழ்ச்சிப் பொங்கத் தெரிவித்தார்.
இதைப் பார்த்த என் கணவர்… ஏன் உன் அம்மா ரஷ்ய மொழியில் குழந்தையை கொஞ்சுகிறார் எனக் கேட்டார். காரணம் “ராதா“ என்றால் ரஷ்ய மொழியில் 'மகிழ்ச்சி'. சமஸ்கிருதத்திலும் 'ராதா' என்றால் மகிழ்ச்சி என்றே பொருள். இதையறிந்ததும் குழந்தைக்கு 'ராதா' என்றே பெயர் வைத்துவிட்டேன்.
குழந்தைக்கு என்னுடைய பெயரும் இருக்க வேண்டும் என என்னுடைய கணவர் ஆசை பட்டதால், 'ராதா சரண் கோஸ்சீவ்' என்று பெயர் வைத்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார்.