இன்ஸ்டாகிராமில் தனுஷுக்கு சமமான ஃபாலோவார்சுடன் கெத்து காட்டும் புகழ்..! டாப் 10 தமிழ் பிரபலங்கள் பட்டியல் இதோ!

Published : Oct 19, 2021, 04:05 PM IST

சமூக வலைத்தளத்தில் அதிகம் ஃபாலோவர்சை வைத்திருப்பது மிகவும் பெருமையான ஒன்றாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த டாப் 10 பட்டியல் இதோ...  

PREV
110
இன்ஸ்டாகிராமில் தனுஷுக்கு சமமான ஃபாலோவார்சுடன் கெத்து காட்டும் புகழ்..! டாப் 10 தமிழ் பிரபலங்கள் பட்டியல் இதோ!

5.7 மில்லியன் ஃபாலோவர்சுகளுடன் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்.

 

210

இவரை தொடர்ந்து 4.8 மில்லியன் ஃபாலோவர்சுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர், இளம் இசையமைப்பாளரும், பாடகருமான ராக் ஸ்டார் அனிருத் தான்.

 

310

முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது, இசையமைப்பாளர்கள் என்றாலும் மூன்றாவது இடத்தில் உள்ளது நடிகர் சிம்பு தான். இவர் 4 .7 மில்லியன் ஃபாலோவர்சுடன் 3 வது இடத்தில் உள்ளார்.

 

410

இவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் 4.6 மில்லியன் ஃபாலோவர்சுடன், பிரபல இளம் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி உள்ளார்.

 

510

5 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் 4.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

 

610

சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளி 6 வது இடத்தை பிடித்து வைத்துள்ளவர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் திரையரங்கில் சக்க போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

710

7 வது இடத்தில் இருப்பவர் பிரபல நடிகர் சூர்யா தான். சமீபத்தில் தான் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த இவரை மிக குறுகிய நாட்களிலேயே 3.4 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

 

810

இவரை தொடர்ந்து சுமார் 3.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோபண்ணுவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம், சமையல் திறமையை நிரூபித்து, தற்போது திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட் ஆகி வரும் அஷ்வினை தான்.

 

910
dhanush

3.2 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் 9 வது இடத்தில் உள்ளார், பிரபல நடிகர் தனுஷ். நடிப்பை தவிர, இயக்கம், தயாரிப்பு, பாடல், என அனைத்திலும் கலக்கி வருபவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

1010

தனுஷை போல் 3 . 2 மில்லியன் ஃபாலோவார்சுடன் 10 இடத்தில் உள்ளவர் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சி மூலம் திரையுலகில் கால் பதித்து கலக்கி கொண்டிருக்கும், காமெடி நடிகர் புகழ் தான்...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories