கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்தவர், வளர்ந்து வரும் நடிகையான இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திடீர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய இறப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை மன்னித்து விடுங்கள். தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் சௌஜன்யா தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் அவருடைய காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை ஏற்று கொண்டு போலீசார் அவரது காதலரை விசாரித்தது மட்டும் இன்றி, சௌஜன்யா உடலின் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தனர்.
actress soujanya suicide
தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை முடிவில், சவுஜன்யா தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கொலை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் சௌஜன்யா பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.