அப்பா - மகள் சேர்ந்து செய்த சாதனை... உச்சகட்ட கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்...!

First Published Feb 14, 2021, 6:24 PM IST

தற்போது அந்த பாடல் யூ-டியூப்பில் படைத்துள்ள சாதனையால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன் தயாரிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.
undefined
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.
undefined
குறிப்பாக வாயாடி பெத்த புள்ள பாடல் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் மகள் ஆராதனாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் அந்த பாடலை பாடியிருந்தது தான்.
undefined
தற்போது அந்த பாடல் யூ-டியூப்பில் படைத்துள்ள சாதனையால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலின் லிரிக் வீடியோ இன்றுடன் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா பாடல்களிலேயே 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 3வது பாடல் என்ற பெருமை கிடைத்துள்ளது.
undefined
இதற்கு முன்னதாக முதல் இடத்தில் தனுஷ் -சாய்பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் 1000 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து முதல் இடத்திலும், ஒய் திஸ் கொலவெறி பாடல் 267 மில்லியனைக் கடந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!