விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டிக்கு நடுவே கலகலப்பான காமெடியுடன் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஹாட் ஸ்டாரில் பதிவேற்ற சில மணி நேரம் தாமதமானால் கூட #CookWithComali ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள் என்றால் பாத்துக்கோங்க
ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி உள்ளிட்டோர் கலக்கி வரும் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதை வென்ற ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலாய்க்க நினைப்பவர்கள் கூட ‘பச்சை மண்ணு’என விலகி செல்லும் அளவிற்கு கலகலப்பான பேச்சு, புன்னகையால் கட்டிப்போட்டு வருகிறார் ஷிவாங்கி. இப்படி ரசிகர்களின் பேவரைட் காமெடி இளவரசியான ஷிவாங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்நிலையில் நேற்று அவருடைய ஆதரவாளர்கள் #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
அதற்கு போட்டியாக சிலர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். அப்படி குக் வித் கோமாளி ஷிவாங்கியின் ட்விட்டர் பக்கத்திலும் அந்த ஹேஷ்டேக் பதிவிடப்பட்டிருப்பது கண்டு ரசிகர்கல் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஷிவாங்கி, தன்னுடைய பெயரில் இப்படியொரு போலி அக்கவுண்டை ஓபன் செய்து தவறாக ட்வீட் செய்து வருவதாகவும், அந்த கணக்கை ரிப்போர்ட் செய்து நீக்கும் படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த செய்தி தற்போது ஹாட் டாப்பிக்காக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.