Nayanthara
மலையாள நடிகையான நயன்தாரா புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ் சினிமா தான். தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இதுவரை தென்னிந்திய மொழி படங்களில் நடித்துவந்த நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில், அவர் ஐட்டம் டான்ஸ் ஆடிய படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
சிவாஜி தி பாஸ்
ரஜினியுடன் சந்திரமுகி என்கிற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டு, அவரின் அடுத்த படமான சிவாஜி தி பாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி அதிர்ச்சி கொடுத்தார் நயன். அதன்படி ஷங்கர் இயக்கிய அந்த பிரம்மாண்ட படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலில் நயனின் கவர்ச்சி நடனம் பிளஸ் ஆக அமைந்தது.
டுவெண்டி 20
மலையாளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் டுவெண்டி 20. உதய் கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தில் ஹே தில் தீவானா என்கிற பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தார் நடிகை நயன்தாரா.