எனினும் தமன்னா அடுத்தடுத்து கல்லூரி, வியாபாரி, போன்ற சில படங்களில் தமிழ் படங்களில் நடித்தாலும், இலியானா தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பின்னர், தளபதி விஜய்க்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'நண்பன்' படத்தில், ஹீரோயினாக நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த போதிலும், அந்த சமயத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதால்... தென்னிந்திய படங்களை தவிர்த்தார்.