மஞ்சள் வீரன் ஹீரோயின் அப்டேட்... முதல் படத்திலேயே டிடிஎப் வாசன் உடன் ரொமான்ஸ் பண்ணப்போகும் நடிகை இவரா?

Published : Jul 17, 2023, 02:51 PM ISTUpdated : Jul 17, 2023, 02:53 PM IST

டிடிஎப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை பற்றி சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

PREV
14
மஞ்சள் வீரன் ஹீரோயின் அப்டேட்... முதல் படத்திலேயே டிடிஎப் வாசன் உடன் ரொமான்ஸ் பண்ணப்போகும் நடிகை இவரா?

சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் டிடிஎப் வாசன். இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் நடிக்கும் முதல் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிட்டுள்ளனர். இப்படம் குறித்த அறிவிப்பை கடந்த மாதம் டிடிஎப் வாசனின் பிறந்தநாளன்று வெளியிட்டனர். இப்படத்தில் நடிகர் கூல் சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

24

டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, அவரும், அப்படத்தின் இயக்குனர் செல் அம்மும் சென்ற கார் மோதி பைக்கில் சென்ற ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்தவரை அவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை தவறாக சித்தரித்து, அவர் ஆட்டோவில் தப்பிச் சென்றதாக சிலர் அவதூறு பரப்பினர். இதனால் வாசன் கடும் மன உளைச்சல் அடைந்தார்.

இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப் நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

34
TTF Vasan

பின்னர் அந்த விபத்து குறித்தும், அப்போது என்ன நடந்தது என்பது குறித்தும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசன், அப்போது தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தால் அது தற்கொலையல்ல கொலை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது மஞ்சள் வீரன் படத்திற்காக தயாராகி வருகிறார் டிடிஎப் வாசன். இதற்காக நடிப்பு பயிற்சியும் அவர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் அவருடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

44

மஞ்சள் வீரன் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அப்படத்தில் டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு விடை அளிக்கும் விதமாக, யூடியூப் பிரபலம் அமலா ஷாஜி தான் டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்தவித அப்டேட்டையும் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அறிவித்தால் தான் இது உண்மையா இல்லை வழக்கம்போல் உருட்டா என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்... "ஹாப்பி பர்த்டே திருநாவுக்கரசு".. விஷ்ணு விஷால் பிறந்தநாளில் டக்கராக வெளியான லால் சலாம் அப்டேட்!

click me!

Recommended Stories