தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபது தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்டார். இவர் முதன்முதலில் இந்தியில் நடித்த திரைப்படம் மும்பைகார். இது தமிழில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தை இந்தியில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன இப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.
Merry Christmas
இதேபோல் ஃபர்சி என்கிற இந்தி வெப் தொடரிலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து விஜய் சேதுபதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தான் விஜய் சேதுபதி நடித்து திரையரங்கில் வெளியாக உள்ள முதல் இந்தி படம். செப்டம்பர் 7-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... அல்லிநகரத்து கில்லி... முதல் மரியாதைக்கு சொந்தக்காரர்! இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று
merry christmas
இதுவரை இந்தியில் காமெடியனாக, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, பாலிவுட்டில் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி உள்ளார். இவர் அந்தாதூன் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
merry christmas
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் இந்தி மற்றும் தமிழ் வெர்ஷனில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். ஆனால் அவர்களுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் மட்டும் அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு மாற்றி உள்ளனர். குறிப்பாக இந்தியில் சஞ்சய் கபூர், வினாயக் பதாக், பிரதிமா கண்ணன், டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள வேடங்களில் தமிழில் ராதிகா ஆப்தே, சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்... காதல் மோசடியில் சிக்கிய விக்ரமனை சீண்டிய அசீம்