நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்... காதல் மோசடியில் சிக்கிய விக்ரமனை சீண்டிய அசீம்

First Published | Jul 17, 2023, 11:28 AM IST

விக்ரமன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கிருபா முனுசாமி என்கிற பெண் பரபரப்பு புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அசீம் போட்டுள்ள சூசக பதிவு வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் விக்ரமன். யூடியூப் சேனல் ஒன்றில் நெறியாளராக பணியாற்றி வந்த இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய விக்ரமன், நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார் விக்ரமன்.

இந்த நிலையில், கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது தெரிவித்த குற்றச்சாட்டு தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. அதன்படி விக்ரமன் கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னிடம் நெருங்கி பழகிவிட்டு, தற்போது ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்காக தான் நிறைய செலவு செய்திருப்பதாக கூறி இருவருக்கும் இடையேயான மெசேஜ் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஆதாரமாக வெளியிட்டார். அவரின் இந்த பதிவு வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ்சுக்கு பிறகும் தொடர்ந்த உறவு.. 15 பேரை ஏமாற்றிய விக்ரமன் - புகார்களை அடுக்கும் இளம் பெண் கிருபா!

Tap to resize

vikraman

கிருபாவின் புகார் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் விக்ரமன் மெளனமாக இருந்து வருவதால், இது உண்மையாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் கிருபா வெளியிட்ட ஆதாராங்கள் அனைத்தும் போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டவை என விக்ரமனின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

azeem

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது விக்ரமனுடன் அடிக்கடி மல்லுக்கட்டி வந்த அசீம் தற்போது போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். (என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்)” என பதிவிட்டிருந்தார் அசீம். அவர் விக்ரமனை சீண்டும் விதமாக தான் இந்த பதிவை போட்டுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்புல்... பாக்ஸ் ஆபிஸில் வசூல்மழை பொழியும் மாவீரன் - மூன்றே நாளில் இம்புட்டு வசூலா?

Latest Videos

click me!