பின்னர் சினிமாவில் முழு கவனத்தை செலுத்திய சரிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்தார். பாலசந்தரையே வியக்க வைத்த நடிகை தான சரிதா. குறிப்பாக அவர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் என்கிற படத்தில் தலையிலும், இடுப்பிலும் குடத்தை வைத்துக் கொண்டு மற்றொரு கையில் குழந்தையுடன் வரும்படி ஒரு காட்சி இருந்ததாம். இந்த சீனை எப்படி எடுப்பது என பாலச்சந்தரே குழம்பிப் போய் இருந்த வேளையில், சரிதா அசால்டாகா ந்த சீனை நடித்து பாலசந்தருக்கே ஷாக் கொடுத்தாராம். இதைப் பார்த்து செட்டில் இருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் திளைத்துப் போனார்களாம்.