ஒரே ஒரு மாஸ் ஹீரோ.. அவருக்கு காதலியாக, அக்காவாக, மாமியாராக, அம்மாவாக நடித்த பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் கடந்த 48 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அன்று தொடங்கி இன்று வரை இவர் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார், அதில் பல்வேறு நாயகிகள் இவரோடு ஜோடியாக நடித்துள்ளனர். அந்த வகையில் இவரோடு காதலியாகவும், பிறகு அக்காவாகவும், அதன் பிறகு, மாமியாராகவும் இறுதியில் அம்மாவாகவும் நடித்த ஒரு நடிகை பற்றி பார்க்கலாம்.

Late Actress Srividya acted various roles with kollywood super star rajinikanth

நடிகை ஸ்ரீவித்யா தமிழ் திரை உலகில் பல நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த ஒரு அற்புதமான நடிகை. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் இவர் நடித்திருந்தாலும், 1967ம் ஆண்டு தமிழில் வெளியான "திருவருட்செல்வர்" என்ற திரைப்படம் தான் இவர் நடித்த முதல் திரைப்படம். 1967ம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டு வரை இவர் திரைத்துறையில் பணியாற்றினார். 

இறுதியாக தமிழில் பிரசாந்தின் "லண்டன்" திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது 38 வருடத் திரை வாழ்க்கையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் முதன் முதல் அறிமுகமான "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் அவருடைய காதலியாக நடித்திருந்தார் ஸ்ரீவித்யா.

"குடும்பஙகள் கொண்டாடும் வெற்றி".. சிவகார்த்திகேயனின் மாவீரன் - படம் பார்த்து Review சொன்ன இயக்குனர் சங்கர்!

Late Actress Srividya acted various roles with kollywood super star rajinikanth

அதை தொடர்ந்து 1987ம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய "மனிதன்" என்ற திரைப்படத்தில் "லட்சுமி" என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாரின் அக்காவாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அதனைத் தொடர்ந்து 1989ம் ஆண்டு ராஜசேகர் என்பவருடைய இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "மாப்பிள்ளை" என்ற திரைப்படத்தில் ஸ்ரீவித்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாமியாராக நடித்திருந்தார்.

அதேபோல 1991ம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "தளபதி" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாயாகவே நடித்திருந்தார் ஸ்ரீவித்யா என்பது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டு துவங்கி பல திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்து ஸ்ரீவித்யா, கடந்த 2006ம் ஆண்டு தனது 53வது வயதில் மண்ணைவிட்டு வெகுசீக்கிரம் விடைபெற்றார்.

ஃபாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!