ஸ்ரேயா சரண்
தமிழில் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராதா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.
பிரியங்கா சோப்ரா
விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு முன்னணி நடிகையான இவர், தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்கிற அமெரிக்க பாடகரை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவை விட நிக் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ராதிகா. இவர் முதலாவதாக பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை இரண்டாவதாக கரம்பிடித்தார் ராதிகா. இவரை திருமணம் செய்த இரண்டே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் ராதிகா. இந்த ஜோடிக்கு ரயானே என்கிற மகளும் உள்ளது. இதன் பின்னரே சரத்குமாரை மூன்றாவதாக மணமுடித்தார் ராதிகா.
இதையும் படியுங்கள்... எப்பவுமே கரண்ட் கட் பண்ணா எப்படி? டுவிட்டரில் புலம்பிய இர்பான் - அமைச்சரிடம் இருந்து வந்த உடனடி ரிப்ளை
ரிச்சா கங்கோபத்யா
தனுஷின் மயக்கம் என்ன, சிம்பு உடன் ஒஸ்தி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், மக்களின் மனதில் இடம்பிடித்த கதாநாயகியாக வலம் வந்தவர் தான் ரிச்சா கங்கோபத்யா. படிப்பதற்காக சினிமாவை விட்டு விலகிய இவர், வெளிநாட்டில் படிக்கும் போது ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார்.