தர்ஷா குப்தாவின் டபுள் டோஸ் கவர்ச்சியால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்... கிக்கான ஹாட் கிளிக்ஸ் இதோ

First Published | Jul 16, 2023, 2:23 PM IST

ஓவர் ஹாட் உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி நடிகை தர்ஷா குப்தா, நடத்திய கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

dharsha gupta

சமூக வலைதளங்களின் வளர்ச்சி, விஸ்வரூப வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் போட்டோவை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வாய்ப்பு தேடி அலைவார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி அதனை மிகவும் எளிதாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோ போட்டாலே வாய்ப்புகள் வீடு தேடி வரும் சூழல் தான் தற்போது நிலவி வருகின்றது.

dharsha gupta

அப்படி சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. கோயம்புத்தூர் பெண்ணான இவர், லாக்டவுன் சமயத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தினசரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதன்மூலம் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த போட்டோஷூட் மூலம் முதலில் சீரியல் வாய்ப்பை பெற்ற தர்ஷா குப்தா, செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடித்தார்.

இதையும் படியுங்கள்... அகரம் மூலம் சிகரம் தொட்ட மாணவர்! அகரம் உதவியுடன் டாக்டர் படித்து உலக சுகாதார மையத்தில் வேலை- சூர்யா நெகிழ்ச்சி


dharsha gupta

அதன்பின்னர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் தர்ஷா குப்தா. அதன்பின்னர் ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் சன்னி லியோனுக்கு போட்டியாக கவர்ச்சியில் மிரட்டிய அவர் தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

dharsha gupta

முன்பெல்லாம் லைட்டாக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வந்த தர்ஷா குப்தா சமீப காலமாக கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அண்மையில் இந்தோனேசியா சென்றிருந்த அவர், அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அனைவரையும் மிரள வைத்தார். இந்நிலையில், தற்போது அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் டபுள் டோஸ் கவர்ச்சி காட்டி இருக்கமாக கிளாமர் உடையில் கவர்ச்சி பொங்க அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சிம்புவின் மாநாடு.. ரீமேக் ரைட்ஸை வாங்கிய "பல்வாள்தேவன்" - ஹிந்தியில் அவரை வைத்து எடுக்கப்போறாராம்!

Latest Videos

click me!