அவர் அறிமுகம் செய்யும் சில நடிகர் நடிகைகளுக்கு R என்று துவங்கும்படி பெயர் வைத்து அறிமுக செய்தவர் பாரதி ராஜா. அந்த வகையில் 1981ம் ஆண்டு அவருடைய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் தான் அறிமுகமானார் உதய சந்திரிகா என்ற ராதிகா. அந்த படம் மூலம் அறிமுகமானார் தான் நவரச நாயகன் கார்த்தியும். ராதாவும், கார்த்தியும் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய நட்சத்திரங்களாக மின்னினார்கள் என்பது நாம் அறிந்ததே.