நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். கல்வி, மருத்துவம், அரசியல் என பல துறைகளிலும் அவரது நன்கொடைகள் சமூக மேம்பாட்டிற்கு உதவியுள்ளன.
இன்றைய தினம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளாகும். திரைத்துறையில் ‘நடிப்பின் நட்சத்திரம்’ என புகழப்பட்டவர் சிவாஜி. இன்று அவரை நினைவுகூரும் வேளையில், யாரும் அறியாத நன்கொடை செய்திகளை நினைவுபடுத்துவது அர்த்தமுள்ளதாகும். திரைத்துறையில் மட்டுமல்லாது, சமூக சேவைகளிலும் இவரது தாக்கம் பெரிது ஆகும். தமிழ் சினிமாவில் அவரது பெருமையைக் காட்டிலும், ஒரு வள்ளலாக அவர் வாழ்ந்த விதமே நம்மை அதிகம் ஆச்சர்யப்படுத்துகிறது.
25
நடிகர் சிவாஜி கணேசன் சமூக சேவை
1953 முதல் 1993 வரை நாற்பது ஆண்டுகளில் மட்டும் இவர் நன்கொடையாக வழங்கிய தொகை சுமார் ரூ.310 கோடியாகும் என்பது ஆச்சரியமான தகவல். இவரது வாழ்நாளில் புயல், வெள்ளம், கல்வி, மருத்துவம் போன்ற பல பிரிவுகளில் அவர் நிதியுதவி செய்திருக்கிறார். அதில் 1968-ல் திருச்சியின் ஜமால் முகமது கல்லூரிக்கு ரூ.1 லட்சம் வழங்கியதும், வேலூர் மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டு உலகத் தமிழர் மாநாட்டுக்காக திருவள்ளுவர் சிலைக்கு ரூ.5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார்.
35
சிவாஜி மறைமுக உதவி
சிவாஜியின் நன்கொடைகள் அரசியலுக்கும் உறுதுணையாக இருந்தது. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜருக்கு கட்சி நிதியாக ரூ.3.5 லட்சம் கொடுத்திருப்பது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ரூ.50 ஆயிரம், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நிதியுதவி போன்ற பல வரலாற்றுச் செயல்கள் அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அன்னதானம், மருத்துவ முகாம், கல்வி உதவித்தொகை என பல வழிகளில் அவர் நேரடியாக மக்களுக்கு உதவியிருக்கிறார்.
தனது சொந்தமான வருமானத்திலிருந்து பங்கெடுத்துக்கொண்டு, இவரது வாழ்நாளில் நன்கொடையாக கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.310 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. இது அண்மையில் வெளியான அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய தகவல் ஆகும். உண்மையில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழ்ந்தார் என்பதே உண்மை. அவரது மனப்பான்மை, பெருந்தன்மை, தனிமனிதக் கொடைகளே அவரை இன்று வரை மக்கள் மனதில் அழியாதவராக்கி உள்ளது என்றே கூறலாம்.
55
நடிகர் திலகம் சிவாஜி நினைவு நாள்
சிவாஜி கணேசன் மீது உலகத் தலைவர்களும் மரியாதை செலுத்தியுள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி எசன் ஹோவருடன் அவர் சந்தித்த ஒற்றை இந்திய நடிகர் என்ற பெருமை அவருக்கே உரியது. இந்துக்களின் உலகளாவிய மாநாட்டிலும் இந்தியாவின் குரலாக பேச அவரை அழைத்திருந்தார்கள். இப்படிப் பட்ட பல செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அறியப்படாமல் போனாலும், இன்று அவரின் நினைவு நாளில் இந்த உண்மைகள் நாம் அனைவரும் நினைவு கூற வேண்டியவை ஆகும்.